Pages

Tuesday, June 28, 2011

உயரமான மலையில் அமைக்கப்படும் மரப் பாதை(படங்கள் இணைப்பு)

Best Blogger Tips
தொலைவில் இருந்து பார்த்தாலே கிறுகிறுக்க வைக்கும் இந்த மலை முகட்டில் எதையும் எதிர்கொள்ள விரும்பும் சுற்றுலா பயணிகளுக்காக 3 அடி அகல மரப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

1.8 மைல் தொலைவுக்கு அமைக்கப்படும் இந்தப் பாதையை அமைக்கும் பணியில் சீனாவின் ஜியன்ஜி மாகாணத்தை சேர்ந்த தொழிலாளிகள் ஈடுபட்டுள்ளனர். 








பல்லாயிரம் அடி உயரத்தில் கயிறுகளை மட்டும் கட்டிக் கொண்டு பாதை அமைத்து வருகிறார்கள். லேசாக கால் இடறி கீழே விழுந்தால் எதுவும் மிஞ்சாது. 

ஆனால் அந்த பயம் அவர்களிடம் துளியும் இல்லை. இந்த பணியை மேற்கொண்டு வரும் இன்ஜினியர் யு ஜி கூறும் போது,"எனக்கு இந்த பணியில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. மற்ற வேலைகளை போலத் தான் இதுவும் இருக்கிறது. நீங்கள் நினைப்பது போல இதில் எந்த ஆபத்தும் இல்லை" என்றார். 

இவர் மலைப் பாதைகளில் சாலை அமைக்கும் பணிகளை கடந்த 10 ஆண்டுகளாக செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
News:Manithan

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget