Sunday, October 16, 2011
போயிங் விமானம் ஒன்று தரையிறங்க முடியாத நிலை 300 பேர் உயிரைக் காப்பாற்றிய டிரக் ரைவர்! (வீடியோ இணைப்பு)
தங்கக்கட்டி கொடுக்கும் இயந்திரம்.....

நாமெல்லாம் தங்கக் கட்டிகளை வங்கிகளிலும், பெரிய நிறுவனங்களிலும் தான் வாங்க முடியும். இந்த நிலையை மாற்றி சீனாவில் தங்கக் கட்டிகளை விற்பனை செய்வதற்கு என தனி இயந்திரங்களை அமைத்துள்ளனர்.
குளிர்பானங்களை விநியோகிக்கும் எந்திரங்கள் போலவே பல இடங்களில் தங்கக் கட்டிகளை விற்பனை செய்யும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாம். தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகிறவர்கள் இந்த இயந்திரத்தின் மூலம் தங்கக் கட்டிகளை வாங்கி வைத்துக் கொள்ளலாம்.
ஆனால் குளிர்பான எந்திரங்கள் போல் இல்லாமல் இந்த தங்க இயந்திரங்களை பாதுகாப்பதற்காக ஆயுதம் ஏந்திய காவலர்களும் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளனராம்.
ஆண்களை கடத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 3 பெண்கள் கைது: சிம்பாவேயில் சம்பவம்

சிம்பாவ்வேயில் ஆண்களுக்கு மயக்க மருந்தை வழங்கி அவர்களைக் கடத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி விந்தணுக்களை திருடிய குற்றச்சாட்டில் 3 பெண்களை அந்நாட்டுப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கவேரு நகரில் வாகனமொன்றில் சென்ற வேளை இந்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களின் வாகனத்திலிருந்து உபயோகிப்பட்ட 33 கருத்தடை உறைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த பெண்கள் ஹரேரே மாஷோலைன்ட் மற்றும் குவேறு ஆகிய நகர்களில் தெருவில் செல்லும் ஆண்களை தமது வாகனத்தில் ஏற்றி அனுமதித்த பின் அவர்களை மயக்க மருந்து கொடுத்து தமது காரியத்தை சாதித்து வந்துள்ளனர்.
இந்தப் பெண்கள் குறிப்பிட்ட ஆண்கள் மயக்கம் தெளிந்ததும் அவர்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வந்துள்ளனர்.
அந்த ஆண்களிடமிருந்து விந்தணுக்களை சேகரித்த பின் அந்தப் பெண்கள் அவர்களை தெருவோரத்தில் கைவிட்டுவிட்டு சென்றுள்ளனர்.
ஆண்களின் விந்தணுக்கள் மூலம் தாம் அதீத மந்திர ஆற்றல்களைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையிலேயே இந்த பெண்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மூவரில் கோபி நகோவரா என்ற 26 வயது யுவதியும் உள்ளடங்குகிறார்.
ஆண்களைக் கடத்திச் சென்று வல்லுறவுக்கு உட்படத்திய குற்றச்சாட்டுக்கு மேலதிகமாக பாதசாரியொருவரை வாகனத்தால் மோதி அவர் பலியாவதற்கு காரணமாக இருந்தமை தொடர்பாக பிறிதொரு வழக்கும் பதிவாகியுள்ளது.
News:Manithan
காதலனால் கடலில் தள்ளிவிடப்பட்ட காதலி! நீந்தி வந்து கரையேறிய அதிசயம்!!

ஊர்காவற்றுறைப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.
இந் நிலையில் இவர்கள் இருவரும் இரகசியத் திருமணம் செய்வதற்காக நெடுந்தீவுப் பகுதிக்குச் செல்லத் தீர்மானித்திருந்தனர்.
இதன்படி அப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடன் பிளாஸ்ரிக் படகு மூலம் நெடுந்தீவுக்கான பயணத்தை ஆரம்பித்தனர்.
இதனிடையே தனது காதலனுடன் இரகசியத் திருமணம் செய்ய நெடுந்தீவுக்குப் புறப்படுவதற்கு முன் குறித்த பெண் தனது வீட்டில் இருந்த 75 ஆயிரம் ரூபாய்களையும், 25 பவுண் நகைகளையும் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார்.
எனவே இதனை அபகரிக்கும் திட்டத்துடன் காதலனும், பிளாஸ்ரிக் படகு உரிமையாளரும் இணைந்து திட்டம் தீட்டிக் குறித்த பெண்ணைக் கடலில் தள்ளி விட்டுச் சென்றுள்ளனர்.
ஆனால் அப் பெண் நீந்திச் சென்று பனங்காணி எனும் பகுதியில் கரையேறியதுடன் பொலிஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
உடனே விரைந்து சென்ற பொலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர். காதலுனுக்கத் துணைபோனதாகக் கூறப்படும் பிளாஸ்ரிக் படகு உரிமையாளர் நெடுந்தீவைச் சேர்ந்தவர் என்றும் தற்போது புங்குடுதீவில் திருமணம் செய்து வாழ்பவர் என்றும் தெரிய வந்துள்ளது.
News:Manithan
மகிந்த நோர்வேயுடன் இரகசிய பேச்சு-இலங்கை அமைச்சர்கள் நோர்வே சென்றனர்!!!

ஜ.நா செயலாளர் நாயகத்தின் அறிவிப்பை தொடர்ந்து இலங்கை அரசின் சமாதான பேச்சுவார்த்தை குழுவினர் நோர்வே சென்றனர்.
இலங்கையின் சமாதான பேச்சுக் குழுவின் தலைவராக இருந்த அமைச்சர் நிமால் சிறீ பால டீ சில்வா தலைமையிலான குழுவினர் நோர்வே சென்று நோர்வேயின் இலங்கைக்கான சமாதான தூதுவரும் நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்கைமை சந்தித்தனர்.
எரிக் சொல்கைம்முக்கும் இலங்கை தூதுக்குழுவினருக்குமான பேச்சுவார்த்தை நேற்றயதினம் நோர்வே வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்றது.
இலங்கையில் நடைபெற்ற யுத்த நிறுத்த மீறல்கள் இறுதி யுத்தம் ஜ.நா செயலாளர் நாயகம் கடந்தவாரம் தமிழ் ஊடகத்துறைக்கு தெரிவித்த கருத்துகள் ஜ.நா நிபுணர் குழு அறிக்கை இலங்கையில் தொடரும் கொலைக் கலாச்சாரம் அபிவிருத்தி மற்றும் இடைத்தங்கல் முகாம் விவகாரம் உட்பட நீண்ட பேச்சுகள் நோர்வே அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நடைபெற்றதாக இலங்கை தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
நோர்வேயில் தங்கி இருக்கும் இலங்கை அமைச்சர் குழுவினர் நோர்வேயில் பல சுற்று பேச்சுகளில் ஈடுபட உள்ளதாக தெரியவருகிறது.
மிகவும் இரகசியமான முறையில் இலங்கை அரசால் ஏற்பாடு செய்யபட்ட இந்த பேச்சுகள் தொடர்பாக செய்திகளை இலங்கையிலும் சர்வதேசத்திலும் வெளியிடுவதற்கு இலங்கை தூதுவராலயமும் இலங்கை அரசும் மறுத்து வருகின்றது.
Saturday, October 15, 2011
சத்தங்களை எழுப்பி தகவல்களை பரிமாறும் மீன்கள்(படங்கள் இணைப்பு)

ஆசை, அடிதடி ஆகியவற்றுக்கு பிரன்ஹாஸ் மீன்கள் 3 சத்தங்களை எழுப்பி தகவல் தெரிவிப்பதாக பெல்ஜியம் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
பெல்ஜியம் நாட்டின் லீஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரின ஆராய்ச்சியாளர் எரிக் பார்மென்டீர்.
இவர் தனது ஆய்வகத்தில் பல வகை மீன்களை தொட்டியில் வளர்த்து அவற்றின் தகவல் பரிமாற்றம் பற்றி ஆராய்ந்தார். அவற்றில் பிரன்ஹாஸ் மீன்கள் தகவல் தொடர்புக்கு 3 விதமான சத்தங்களை பயன்படுத்துவதாக கண்டுபிடித்தார்.
இதுபற்றி எரிக் கூறியதாவது: மற்றவர்கள் கவனத்தை கவர சண்டையிடுவதைவிட சத்தம் எழுப்புவது குறைவான சக்தியை வெளியிடும் என்பதை விலங்குகள் அறிந்துள்ளன.
இணையை கவர்வதற்கு பல வகை மீன்கள் சத்தம் எழுப்புவது உண்டு. இனவிருத்திக்கு மீன்கள் சத்தம் எழுப்புவது அவசியமான அறிகுறி என இதன்மூலம் தெரிகிறது.
மீன்கள் எழுப்பும் சத்தத்தை புரிந்து கொள்வதன் மூலம் அவற்றின் நடவடிக்கைகளை அறிய முடிந்தால் கடலில் மீன்களை நம்பியுள்ள மீனவர்களுக்கு அதுபற்றி நாம் தெரிவிக்க முடியும்.
அதற்கான சரியான நேரம் இன்னும் வரவில்லை. எனினும் ஆய்வகத்தில் பிரன்ஹாஸ் மீன்களின் தகவல் பரிமாற்றத்தை நீருக்கடியில் மைக்ரோபோன் பொருத்தி பொறுமையாக காத்திருந்து பதிவு செய்தோம்.
அதில் முதல் சத்தம் குரைப்பது போல இருக்கிறது. அது தனது வருகையை மற்ற மீன்களுக்கு உணர்த்துவதாக இருக்கிறது. சண்டையிடுவதற்கு பதிலாக சத்தம் மூலம் மிரட்டுவதாக உள்ளது.
டிரம்ஸ் எழுப்பும் சத்தம் போல உள்ள அடுத்த 2 ஒலிகளை மீன்கள் ஒன்றையொன்று துரத்தும் போதும், கடிக்கும் போதும் எழுப்புகின்றன. பொதுவாக உணவுக்காக சண்டை நடக்கும்போது இதுபோன்ற சத்தம் எழுகிறது.
News: Manithan
Subscribe to:
Posts (Atom)


